“நம் பணிகளுக்கு வழிகாட்டிய தமிழுணர்வாளர்” - தேவநேய பாவாணர் பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் | கோப்புப் படம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: “நம் பணிகளுக்கு வழிகாட்டிய தமிழுணர்வாளர் தேவநேய பாவாணர்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

மொழிஞாயிறு தேவநேய பாவாணர் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தனித்தமிழ் இயக்கத்துக்கும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்துக்கும் தன் வாழ்நாளெல்லாம் உழைத்தவர் திராவிட மொழிநூல் ஞாயிறு தேவநேய பாவாணர்.

திமுக அரசின் தமிழ் காக்கும் பணிகளை மெச்சி, 'திமுக அரசே தமிழ்நாட்டை வழி வழி ஆள்க' என வாழ்த்தி, தமிழின் உண்மையான இயல்பையும் வரலாற்றையும் அறிந்து - தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிப்படுத்துதல் வேண்டும் என நம் பணிகளுக்கு வழிகாட்டிய தமிழுணர்வாளர்!

தமிழ் வரலாறு, தமிழர் வரலாறு, தமிழர் மதம், தமிழர் திருமணம், திருக்குறள் உரை எனத் தமிழின் தனிச்சிறப்பை நிறுவ தனிமனிதப் பல்கலைக்கழகமாக அவர் ஆற்றிய அளப்பரிய தொண்டை அவரது பிறந்தநாளில் நன்றியோடு நினைவுகூர்கிறேன்!" என்று அந்தப் பதிவில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in