

இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கோடை விடுமுறை கால சிறப்பு விசா ரணையில் வழக்குகளை நடத்த வழக்கறிஞர்கள் ஆர்வம் இல்லா மல் உள்ளனர். இந்த நடை முறைக்கு பதில் நீதிமன்றங்கள், நீதிபதிகளை அதிகப்படுத்தி வழக்குகள் தேக்கமடைவதை குறைக்கலாம் என வழக்கறிஞர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றம், அதன் மதுரை கிளைக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களில் வாரம் 2 நாட்கள் வீதம் 8 நாட்கள் விடுமுறை கால நீதிமன்றம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, வழக்குகளை முடிக்க விரும்பும் நாளில் சிறப்பு விசாரணை நடத்த நீதிபதிகள் பரிசீலிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து நாடு முழுவதும் இந்த ஆண்டு முதல் கோடை விடுமுறையில் சிறப்பு நீதிமன்றங் கள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தலைமை நீதிபதியின் வேண்டுகோளை ஏற்று சென்னையில் 20 நீதிபதிகள், மதுரை கிளையில் 9 நீதிபதிகள் பல்வேறு தேதிகளில் சிறப்பு விசாரணை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளனர். இவ்வாறு நீதிபதிகளின் விருப்பத்தின்பேரில் நடைபெறும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடத்த முன்வரும் நீதிபதிகளின் முன்பு மனுதாரர்கள், எதிர்மனுதாரர்களின் வழக் கறிஞர்களின் ஒப்புதலின்பேரில் வழக்குகளை பட்டியலிட பதிவுத் துறைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
இருப்பினும் சிறப்பு விசா ரணைக்கு வழக்கறிஞர்கள் மத்தி யில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லை. சிறப்பு விசாரணையின் முதல் நாளில் சில நீதிபதிகள் முன்பு ஒற்றை இலக்கத்தில்தான் வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்பட் டன. ஒரு சில வழக்கறிஞர்கள் மட்டுமே சிறப்பு விசாரணையில் தங்கள் வழக்குகளை நடத்த விருப் பம் தெரிவித்து பதிவுத்துறைக்கு கடிதம் கொடுத்துள்ளனர்.
இது தொடர்பாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் கூறியதாவது: பெரும்பாலான வழக்கறிஞர்கள் கோடை விடுமுறையில் பல் வேறு இடங்களுக்கு குடும்பத் துடன் சென்றுள்ளனர். கோடை விடுமுறையை வழக்கறிஞர்கள் ஏற்கெனவே திட்டமிட்டு மேற்கொள் கின்றனர். நீதிபதிகள் தினமும் அதிக நேரம் உழைக்கின்றனர். நீதிமன்ற ஊழியர்களும் வேலைப்பளுவால் தவிக்கின்றனர். இதனால் இவர் களுக்கு குறிப்பிட்ட நாட்கள் விடுமுறை அவசியமானது.
வழக்குகள் தேங்குவதை குறைப்பதற்கு தேவை சிறப்பு விசாரணை அல்ல. நீதிமன்றங் கள், நீதிபதிகள் எண்ணிக்கையை உயர்த்தினால் மட்டுமே வழக்கு விசாரணை விரைவில் நடை பெறும். குறைவான மக்கள் தொகை இருக்கும் நாடுகளிலும், அதிக எண்ணிக்கையில் நீதிமன் றங்கள் உள்ளன. ஆனால் இந்தியாவில் அதிக வழக்கு கள் தாக்கலாகின்றன. ஆனால் குறைந்த அளவு நீதிமன்றங்கள் தான் உள்ளன. எனவே வழக்கு கள் தேங்குவதை குறைக்க கோடை விடுமுறையில் சிறப்பு நீதிமன்றங்கள் நடத்துவதை விட நீதிமன்றங்கள், நீதிபதி களின் எண்ணிக்கையை அதி கரிப்பது தான் தீர்வாக இருக்கும் என்றார்.