இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை: சென்னையில் 40 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம்

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை: சென்னையில் 40 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம்
Updated on
1 min read

மாடுகளை இறைச்சிக்காக விற்கத் தடை விதிக்கும் சட்டத் திருத்தத்தால், அத்தொழிலை நம்பியுள்ள 40 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் சங்கத் தலைவர் ஷபீர் அகமது தெரிவித்துள்ளார்.

மாடுகளை இறைச்சிக்காக விற்க தடை விதிக்கும் வகையில், விலங்கு வதை தடுப்புச் சட்ட விதிகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கையை பல்வேறு தரப்பினர் எதிர்த்து வருகின்றனர். இந்த சட்டத் திருத்தத்தால், மாட்டு இறைச்சி தொழிலில் ஈடுபட்டு வருவோரின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் சங்கத் தலைவர் ஷபீர் அகமது கூறியதாவது:

சென்னையில் சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், புளியந்தோப்பு ஆகிய 3 இடங்களில் சென்னை மாநகராட்சி சார்பில் இறைச்சிக் கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் புளியந்தோப்பு இறைச்சிக் கூடம்தான் மிகப்பெரியது. இங்கு மட்டும் மாடுகள் வெட்டப்படுகின்றன. வார நாட்களில் தினமும் சராசரியாக 200 மாடுகளும், ஞாயிற்றுக்கிழமைகளில் 400 மாடுகள் வரையும் இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன.

மேலும் சென்னை மாநகராட்சியிடம் உரிமம் பெற்று 7 ஆயிரம் பேர் மாட்டு இறைச்சி விற்பனை கடை நடத்தி வருகின்றனர். மேலும் எலும்பு, தோல் வியாபாரத்திலும் பலர் ஈடுபடுகின்றனர்.

இத்தொழிலை நம்பி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் என மொத்தம் 40 ஆயிரம் பேர் உள்ளனர். மத்திய அரசின் விலங்கு வதை தடுப்பு சட்டத் திருத்தத்தால், இவர்கள் வேலை இழந்து, வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு, இந்த சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் சங்கத் தலைவர் ஷபீர் அகமது கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in