போக்குவரத்து ஊழியர் சங்கங்களுடன் இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை: சென்னையில் நடக்கிறது

போக்குவரத்து ஊழியர் சங்கங்களுடன் இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை: சென்னையில் நடக்கிறது
Updated on
1 min read

அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் தொடர்பான 2-ம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னையில் இன்று நடக்கிறது. இது தொடர்பாக அரசுப் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

அரசு போக்குவரத்துத் துறையின் வரவு, செலவு கணக்கை ஒப்பிட்டு தொழிலாளர்களின் நலனை கருத்தில்கொண்டு சில முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், தொழிற்சங்க நிர்வாகிகளுடனான 2-ம் கட்ட பேச்சுவார்த்தை, குரோம்பேட்டை பணிமனையில் 4-ம் தேதி (இன்று) நடத்தப்பட உள்ளது. தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ள கோரிக்கைகள் குறித்து இந்தப் பேச்சுவார்த்தையின்போது விரிவாக விவாதிக்கப்படும்.

இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in