Published : 18 May 2017 04:21 PM
Last Updated : 18 May 2017 04:21 PM

மேட்டூர் அணை தூர்வாரும் பணி அடுத்த வாரம் தொடங்கும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமான மேட்டூர் அணையைத் தூர்வாரும் பணி அடுத்த வாரம் தொடங்கும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் 121-வது மலர் கண்காட்சியை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று (மே 19) தொடங்கிவைக்கிறார். இதற்காக, நேற்று மாலை விமானம் மூலம் கோவை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவும் இத்தருணத்தில் மழை நீரை சேமிக்க வேண்டும் என்பதற்காக 1,519 ஏரிகளில் குடி மராமத்துப் பணிகள் தொடங்கப் பட்டுள்ளன. அதற்காக முதல்கட்ட மாக ரூ.100 கோடி ஒதுக்கப்பட் டுள்ளது. இதேபோல, ரூ.300 கோடி திட்டத்தில் 2,200 ஏரிகளை தூர்வாரு வதற்கு அரசு நடவடிக்கை எடுத் துள்ளது. அடுத்த வாரத்திலேயே மேட்டூர் அணை தூர்வாரும் பணியும் தொடங்கும். மழைநீரை அதிக அளவில் சேமிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு அணைகளையும் தூர் வார நடவடிக்கை எடுக்கப்படும்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் நிவாரணம் அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத் தின் மூலம் நிதி பெற்றுத் தருவ தற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சுமார் ரூ.7000 கோடி ரூபாய் வரை பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் நிதி வழங்கப்பட உள்ளது.

தலைமைச் செயலகத்தில் முத லமைச்சர் அலுவலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் தொடர்பு கொண்டு, மாவட்ட நிர்வாகங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கோவை, மதுரை, சேலம் , திருச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்ட நிர் வாகங்கள் குறித்த ஆய்வு நடை பெற்றது. அதில், மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள குடிநீர் திட்டப் பணிகள் குறித்து கேட்ட றிந்தோம். வறட்சியால் ஏற்படும் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற் காக ஆலோசனைகளும் வழங்கப் பட்டுள்ளன. வறட்சி நிவாரணம் கிடைக்காமல் விடுபட்டுள்ள விவ சாயிகளுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கவும் ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிமுக அணிகள் இணைப்பு குறித்து கேட்டபோது, ‘இணைப்பு பேச்சுவார்த்தை நடந்துகொண்டு தான் இருக்கிறது’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x