

அரசு போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதையடுத்து, வேலைநிறுத்த அறிவிப்பு திரும்பப் பெறப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் 1 லட்சத்து 43 ஆயிரம் ஊழியர் களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது. 13-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக இதுவரை நடந்த 3 கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந் துள்ளது. இதையடுத்து, ஏற் கெனவே திட்டமிட்டபடி, வரும் 15-ம் தேதி முதல் காலவரை யற்ற வேலைநிறுத்தப் போராட் டத்தில் ஈடுபடப் போவதாக தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்நிலையில், சென்னை தலை மைச் செயலகத்தில் முதல்வர் கே.பழனிசாமியுடன் போக்குவரத் துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நேற்று ஆலோ சனை நடத்தினார். இதில், பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் குழுவினரும் இடம் பெற்றனர்.
இதைத் தொடர்ந்து போக்கு வரத்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சென்னை பல்லவன் இல்லத்தில் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதில், பங்கேற்க வருமாறு தொழிற்சங்க நிர்வாகி களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
தனி ஆணையர் தலைமையில்..
இதேபோல, போக்குவரத்து ஊழியர்களின் 13வது ஊதிய ஒப் பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை தொழிலாளர் நலத்துறை தனி ஆணையர் யாஸ்மின் பேகம் தலைமையில் 12-ம் தேதி (நாளை) நடக்கிறது. இதில், 10 தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகளும், அரசின் சார்பில் போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்பார்கள். ஏற்கெனவே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது, போக்குவரத்து ஊழியர்களுக்கு 12வது ஊதிய ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தையில் இவர் முன்னிலை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் என அதி காரிகள் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இத னால், வேலைநிறுத்த அறிவிப்பு திரும்பப் பெறப்படுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு போக்கு வரத்துத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘போக்குவரத்து துறையில் இதுவரை இல்லாத அளவுக்கு முதல்முறையாக தொழிலாளர்களின் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு ஒரேமுறையாக ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளது. மேலும், சேவையை நோக்கமாகக் கொண்டு இயங்கும் அரசு போக்கு வரத்துத் துறை பல ஆண்டுகளாக நஷ்டத்தில் இருக்கிறது.
நஷ் டத்தை குறைக்கும் வகையில் சமீபகாலமாக பல்வேறு புதிய நடவடிக்கைகள் எடுக்க போக்கு வரத்துக் கழகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிதி உள்ளிட் டவை படிப்படியாக வழங்கப் படும் என முதல்வர் உறுதி அளித் துள்ளார். இது குறித்து தொழிற்சங் கங்களுடன் அமைச்சர் வியாழக் கிழமை (இன்று) பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்’’ என்றனர்.