Published : 17 May 2017 07:43 AM
Last Updated : 17 May 2017 07:43 AM

அனுபவம் இல்லாத ஓட்டுநர்களை கொண்டு பேருந்துகளை இயக்குவது ஆபத்தானது: உயர் நீதிமன்றத்தில் முறையீடு

அனுபவம் இல்லாத ஓட்டுநர் களைக் கொண்டு அரசு பேருந்து களை இயக்குவது ஆபத்தானது என்பதால், இதுகுறித்து விசாரிக்கு மாறு உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி முறையிட்டார்.

போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்து போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக் கப்பட்டுள்ளது. நிலைமையை சமாளிப்பதற்காக, தற்காலிக ஓட்டுநர்களைக் கொண்டு பேருந்து கள் ஓரளவு இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி இதை சென்னை உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார். உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று ஆஜராகி அவர் கூறிய தாவது:

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்துவருவதால், பேருந்துகளை இயக்க தற்காலிக ஓட்டுநர்களை அரசு நியமித்துள்ளது. போதிய அனுபவம் இல்லாத ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்குவதால், பயணிகள் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றத் தால் தீர்ப்பு அளிக்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப் படம், அரசுப் பேருந்துகளில் இடம்பெற்றிருப்பது சட்ட விரோதம். இதற்காக அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீதிமன்றம் தாமாக முன்வந்து இதை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதோடு, மக்கள் நலன் கருதி போக்குவரத்து ஊழியர் கள் போராட்டத்தையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு அவர் முறையிட்டார். இதுதொடர்பான மனுவையும் நீதி மன்றத்தில் அவர் தாக்கல் செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x