தெய்வீகத்தின் சன்னிதியில் பாகுபாடு பார்க்கக் கூடாது: தென்முடியனூர் சம்பவம் தொடர்பாக சத்குரு கருத்து

சத்குரு | கோப்புப் படம்
சத்குரு | கோப்புப் படம்
Updated on
1 min read

கோவை: தெய்வீகத்தின் சன்னிதியில் மனிதர்களுக்கிடையே பாகுபாடு பார்ப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம் என சத்குரு தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் தென்முடியனூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலுக்குள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் செல்ல கடந்த 80 ஆண்டுகளாக அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.

அப்பகுதி மக்கள் அளித்த புகாரின்பேரில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், காவல் துறை அதிகாரிகளின் முன்னிலையில் 80 ஆண்டுகளுக்குப் பிறகு முத்துமாரியம்மன் கோயிலுக்குள் அப்பகுதி மக்கள் நுழைந்து வழிபட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக சத்குரு தனது ட்விட்டர் பதிவில், “தெய்வீகமும், பாகுபாடும் ஒன்றாக இருக்க முடியாதவை. தெய்வீகத்தின் சன்னிதியில் மனிதர்களுக்கிடையே நாம் பிரித்துப் பார்ப்பதே வெட்கப்பட வேண்டிய விஷயம். தென்முடியனூருக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in