Published : 06 Feb 2023 06:59 AM
Last Updated : 06 Feb 2023 06:59 AM
சென்னை: ஸ்ரீ சாய்ராம் குழுமம் மற்றும் தற்சார்பு பாரத் மிஷன் சார்பில் ஒருநாள் மெகா தொழில்முனைவோர் திட்டம் நடைபெற்றது. இதில் சென்னை முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளிலிருந்து சுமார் 1,000 மாணவர்கள், 150 இளம் தொடக்க தொழில்முனைவோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கு சாய்ராம் நிறுவனங்களின் தலைவர் சாய் பிரகாஷ் லியோ முத்து தலைமை தாங்கினார். மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசியது: பிரதமரின் தொலைநோக்குப் பார்வையான 2047-ஐ வலியுறுத்தினார். ``வரவிருக்கும் 25 ஆண்டுகளில் நாடு வளர்ச்சி பெற இந்தியாவில் மேக் இன் இந்தியா, ஸ்டார்ட்-அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மூலம் செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
2014-க்கு முன் பல்வேறு அரசுத் திட்டங்கள் குடிமக்களை நேரடியாகச் சென்றடையவில்லை. தற்போது டிஜிட்டல் சகாப்தத்தில் திட்டங்கள் அனைத்தும் உடனடியாக மக்களைச் சென்றடைகின்றன. கிராமப்புற மக்கள் சிறு மற்றும் நடுத்தர தொழில்களைத் தொடங்குவதற்கு அரசின் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் திட்டம் சிறந்த தீர்வாகும்.
இந்திய அரசின் திட்டங்கள் மற்றும் ஊக்குவிப்பு காரணமாக 2017-ல் 3 இலக்கத்தில் இருந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 80 ஆயிரத்தை எட்டியுள்ளன. இவ்வாறு கூறினார்.
சாய்ராம் நிறுவனங்களின் தலைவர் சாய் பிரகாஷ் லியோ முத்து பேசும்போது, ``இந்தியாவை வல்லரசு நாடாக்கும் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் கனவை நனவாக்க அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்'' என்றார். ஸ்டார்ட்-அப்களின் முக்கியத்துவத்தை தற்சார்பு பாரத் மிஷன் ஒருங்கிணைப்பாளர் பி.சந்திரசேகரன் வலியுறுத்தினார்.
ஸ்ரீ சாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் கே.பழனிகுமார், செட்டிநாடு சிமென்ட் குழுமத் தலைவர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT