

சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் கே.கிருஷ்ணசாமி நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: முறைகேடுகள் மூலம் அதானி குழுமம் வளர்ச்சியடைந்ததாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியுள்ள நிலையில் செபி உள்ளிட்ட நிறுவனங்கள் இதை கண்காணிக்க தவறியது ஏன்?
அதானி குழும விவகாரத்தில் எஸ்பிஐ, எல்ஐசி போன்ற அரசு நிறுவனங்களின் முதலீடு மற்றும் பாதிப்பு குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும். அதேநேரம் சிறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு தனி கவனம் செலுத்த வேண்டும். பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முயற்சியை முற்றாக கைவிட வேண்டும்.