

ஆட்சியாளர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள பதவிச் சண்டையால் தமிழக அரசு நிர்வாகம் முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.
தொழிலாளர் தினத்தை முன் னிட்டு மதுரையில் நேற்று மார்க் சிஸ்ட் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: அதிமுகவில் முதல்வர் பழனிசாமியும், ஓ.பன் னீர்செல்வமும் கட்சியின் தலைமை மற்றும் ஆட்சியை கைப்பற்றுவ தில்தான் போட்டி போட்டு வரு கின்றனர். தமிழகத்தையோ, தமி ழக மக்களை பற்றியோ சிறிதும் கவலைப்படவில்லை. இதனால் தமிழகத்தில் அரசு நிர்வாகம் முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. குடிநீர் இல்லாமல் மக்கள் அல்லல்படுகின்றனர்.
பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு உரிய இழப்பீடு வழங்கா மல் தமிழக அரசு உச்ச நீதிம ன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூலத்தில் வறட்சி யால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை எனக் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. வெள்ளம், வறட்சியால் பாதிக்கப் பட்ட மாநிலத்தை பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும். ஆனால், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தை பேரிடர் பாதித்த மாநிலமாக மத்திய அரசு அறிவிக்கவில்லை.
டெல்லியில் விவசாயி அய்யாக்கண்ணு தலைமையில் நடந்த போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் அவமானப் படுத்திவிட்டது. பொது விநியோ கத் திட்டத்தில் துவரம் பருப்பு, பாமாயில் அரைகுறை யாக வழங்கப்பட்டு வருகிறது. இவ் வாறு அவர் தெரிவித்தார்.