

போக்குவரத்து தொழிலாளர் களுக்கு தர வேண்டிய நிலு வைத் தொகைக்காக தமிழக அரசு ரூ.10 ஆயிரம் கோடி கடன் வாங்கி, பிரச்சினையை முடி வுக்கு கொண்டு வர வேண்டும் என சிஐடியு தொழிற்சங்க மாநிலத் தலைவர் சவுந்தரராஜன் வலியுறுத்தினார்.
சேலத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: போக்குவரத்து தொழி லாளர்களின் கோரிக்கை குறித்து தமிழக அரசிடம் 4 முறை பேச்சு வார்த்தை நடத்தியும் இழுபறி யாக உள்ளது. தொழிலாளர் களுக்கு ரூ.750 கோடி வழங்கு வதாக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், போக்குவரத்து ஊழியர்கள், ஓய்வுபெற்ற ஊழி யர்களின் ஊதியம், வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் உள் ளிட்ட தொழிலாளர்களின் நிதி ரூ.7,000 கோடியை பல்வேறு திட்டங்களுக்கு தமிழக அரசுதான் செலவழித்துள்ளது. அதில், 10 சதவீதமாக ரூ.750 கோடியை மட்டுமே தருவதாக தற்போது கூறுகிறது.
தமிழக அரசு ரூ.3 லட்சம் கோடி கடன் பிரச்சினையில் சிக்கித் தவித்து வருவதாக அமைச் சர் கூறியுள்ளார். அரசுக்கே இவ்வளவு பிரச்சினை என்றால், தொழிலாளர்கள், ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் குடும்பங்கள் எவ்வளவு பிரச்சினையில் இருக் கும் என்பதை அரசு எண்ணிப் பார்க்க வேண்டும். நாங்கள் அரசுக்கு நெருக்கடி தரவில்லை.
பல்வேறு தேவைகளுக்காக ரூ.3 லட்சம் கோடியை கடன் வாங் கியுள்ள தமிழக அரசு, போக்குவரத்து தொழிலாளர் களுக்காக ரூ.10 ஆயிரம் கோடி கடனை வாங்கிக் கொடுத்து பிரச் சினையை தீர்வுக்கு கொண்டு வர வேண்டும்.
அரசுடன் நடைபெறும் பேச்சு வார்த்தையின்போது, தொழிலாளர்களுக்கு ரூ.7,000 கோடியைத் தருவது தொடர்பாக உறுதியான உத்தரவாதத்தை அரசு கொடுக்காவிட்டால், திட்ட மிட்டபடி போக்குவரத்து தொழி லாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும். தொழி லாளர்கள் அனைவரும் ஒற்று மையாக இருப்பதால், அரசு எவ்வளவு முயற்சித்தாலும் ஒருநாள் மட்டுமே பேருந்துகளை இயக்க முடியும். அதன்பின்னர் போராட்டத்தை தடுக்க முடியாது.