

கிண்டியில் ஐ.ஐ.டி வளாகம் உள்ளது. இங்கு மாணவ, மாணவிகள் தங்கும் விடுதியும் உள்ளது. இங்குள்ள பிரம்மபுத்திரா மாணவர் விடுதி பின்புறம் உள்ள முட்புதரில் பெண் ஒருவர் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார்.
இதுகுறித்து, கோட்டூர்புரம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீஸார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோட்டூர்புரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “இறந்து கிடந்த பெண்ணுக்கு 40 முதல் 50 வயது இருக்கும். சடலம் அழுகிய நிலையில் இருந்ததால் உடலில் காயம் ஏதும் இருந்ததா என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.