முதியோர் இல்லங்கள் அருகில் டாஸ்மாக் மதுக் கடைகளை திறக்க தடை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

முதியோர் இல்லங்கள் அருகில் டாஸ்மாக் மதுக் கடைகளை திறக்க தடை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்களைப் போல முதியோர் இல்லங்கள் அருகிலும் டாஸ்மாக் மதுபானக்கடைகளை திறக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பொள்ளாச்சி அய்யம்பாளையம் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவ ரான பி.ராஜூ சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘நான் கடந்த 10 ஆண்டுக ளுக்கும் மேலாக பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்துள்ளேன். சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் அருகில் உள்ள மதுபானக் கடைகளை உடனடியாக அங் கிருந்து அப்புறப்படுத்தவும், அப்பகுதிகளில் மதுபானக் கடைகளை திறக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.

இதனால் தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. நெடுஞ் சாலைகளின் ஓரங்கள் மற்றும் அருகாமையில் இருந்த கடைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் தமிழக அரசு நெடுஞ்சாலைகளில் இருந்து அப்புறப்படுத்திய மதுபானக் கடைகளை வேறு வழியின்றி முதியோர் இல்லங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் திறக்க முயற்சித்து வருகிறது.

தற்போது அய்யம்பாளையம் பகுதியிலும் முதியோர் இல்லம் அருகே ஒரு டாஸ்மாக் மதுபானக் கடையைத் திறக்க அரசு அதிகாரி கள் முயற்சித்து வருகின்றனர். இதற்கு நான் உள்ளிட்ட ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும், அதிகாரிகள் அங்கு மதுபானக் கடையை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

முதியோர் இல்லங்களில் ஏற் கெனவே ஆதரவற்ற முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். முதியோர் இல்லங்களுக்கு அரு கில் மதுக்கடைகளை திறந்தால் முதியவர்களுக்கு பல்வேறு இடை யூறுகள் ஏற்படும். எனவே அப்பகுதி யில் டாஸ்மாக் மதுபானக்கடையை திறக்க தடை விதிக்க வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் நடந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘வழிபாட்டுத் தலங் கள், கல்வி நிலையங்கள் அருகே எப்படி மதுபானக் கடைகளை திறக்க தடை உள்ளதோ, அதுபோல முதியோர் இல்லங்கள் அருகிலும் மதுபானக் கடைகளை திறக்கக் கூடாது. முதியோர் இல்லங்களுக் கும், மதுபானக் கடைகளுக்கும் இடையே உள்ள தூர இடை வெளியை கண்டிப்பாக அதிகாரி கள் நடைமுறைப்படுத்த வேண் டும்’’ என உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in