

மயிலாப்பூரில் அதிவேகமாகச் சென்ற பைக் மோதியதில், சாலை யைக் கடக்க முயன்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இன் னொரு பெண் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பைக் ஓட்டிவந்த சிறுவன், அவனது நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மயிலாப்பூர் யோகாம்பரபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மீனா (52), அதே பகுதியைச் சேர்ந்தவர் யசோதா (58). இருவரும் ராயப்பேட்டையில் உள்ள ஒரு வழக்கறிஞரின் வீட்டில் வேலை செய்து வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு, இரு வரும் மயிலாப்பூர் ராதாகிருஷ் ணன் சாலையில் ஓரமாக நடந்து வந்துள்ளனர். கல்யாணி மருத்துவ மனை அருகே சாலையைக் கடந்த போது, மெரினா நோக்கி அதிவேக மாக சென்ற பைக் ஒன்று, இருவர் மீதும் மோதியது. தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் இருவரும் மயங்கி விழுந்தனர்.
இதுகுறித்த தகவல் அறிந்து, அடையாறு போக்குவரத்து புல னாய்வுப் பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இருவரையும் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். மேல் சிகிச் சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மீனா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார். யசோதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பைக் ஓட்டிவந்த ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த 16 வயது சிறுவனையும், உடன் வந்த 19 வயது நண்பரையும் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பைக் பறி முதல் செய்யப்பட்டுள்ளது.
நடவடிக்கை எடுப்பார்களா?
விபத்து குறித்து சமூக ஆர்வலர் கள் கூறியபோது, ‘‘விடுமுறை நாட்களில் சென்னையில் பைக் ரேஸ் தொடர்ந்து நடந்து வருகி றது. குறிப்பாக மெரினா காம ராஜர் சாலை, மயிலாப்பூர் ராதா கிருஷ்ணன் சாலை, அடையாறு, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்ல புரம் சாலைகளில் அடிக்கடி பைக் ரேஸ் நடக்கிறது. இதை போலீ ஸார் கண்டுகொள்வது இல்லை. விபத்து நடந்துவிட்டால், கண் துடைப்புக்காக கைது நடவடிக்கை எடுக்கின்றனர். அதன்பிறகும் தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுப்பதில்லை.
இனியாவது பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள், அதி வேகமாக பைக் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து உயிர்ப்பலியை தடுக்க வேண்டும்’’ என்றனர்.