

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக் கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம் குருவிநாயனப்பள்ளி ஆகிய 2 இடங்களில் புதிய சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார்.
சட்டப்பேரவையில் புதன் கிழமை போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது:
அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் மகள் மற்றும் மகன் திருமணத்துக்கு தற்போது முறையே ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம் முன்பணமாக வழங் கப்படுகிறது. திருமணச் செலவு உயர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த முன்பணம் முறையே ரூ.40 ஆயிரம் மற்றும் ரூ.30 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
பணியில் இருக்கும் போக்கு வரத்துத் தொழிலாளர்களுக்கு, தற்போது வழங்கப்படும் குடும்ப இலவச பயணச் சலுகை 4,500 கி.மீட்டரில் இருந்து 5 ஆயிரம் கி.மீட்டராக உயர்த்தப்படும்.
7 பணிமனைகள்
பவானி, ராஜபாளையம், ஓரிக்கை, கீரனூர், மணமேல்குடி, தாமரைப்பாக்கம், திருமயம் ஆகிய 7 இடங்களில் ரூ.7 கோடியில் புதிய போக்குவரத்து பணிமனைகள் அமைக்கப்படும். தண்டையார்பேட்டை, அயனா வரம், புதுக்கோட்டை, உருளிப் பட்டை ஆகிய இடங்களில் உள்ள தகுதிச் சான்று புதுப்பிக் கும் பிரிவு ரூ.3 கோடியில் விரிவுபடுத்தப்படும். போக்கு வரத்து பணியாளர்களுக்கு ரூ.25 லட்சத்தில் உயர் தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படும். போக்கு வரத்துப் பணிமனை மற்றும் தொழிற்கூடங்களில் ரூ.3 கோடியில் 200 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் பொருத்தப்படும். தொழிலாளர்களின் ஈமச்சடங் குக்கு வழங்கப்படும் தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.
சோதனைச் சாவடி
அண்டை மாநிலங்களில் இருந்து மாற்று வழித்தடங்களில் வாகனங்கள் தமிழகத்துக்குள் நுழைவதைத் தணிக்கை செய்ய திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம் குருவிநாயனப்பள்ளி ஆகிய 2 இடங்களில் புதிய சோதனைச் சாவடிகள் அமைக் கப்படும்.
வாகன விற்பனையாளரிடம் இருந்து புதிய வாகன பதிவுக்காக பெறப்படும் விண்ணப்பங்களில் உள்ள வாகன அடிச்சட்ட எண், பொறி எண் ஆகியவற்றை கணினியில் பதிவு செய்யும்போது ஏற்படும் இடையூறுகளைத் தவிர்ப் பதற்காக, 79 வட்டாரப் போக்கு வரத்து அலுவலகங்கள் மற்றும் 58 பகுதி அலுவலகங்களுக்கு ‘பார் கோடு ஸ்கேனர்’ வழங்கப்படும்.
மகளிருக்கு கூடுதலாக 50 பஸ்கள்
சென்னையில் பணிக்குச் செல்லும் பெண்களின் எண் ணிக்கை அதிகரித்து வருவதால், தற்போது இயக்கப்பட்டு வரும் மகளிர் மற்றும் சிறுவர்களுக்கான பஸ்களின் எண்ணிக்கை 200-ல் இருந்து 250 ஆக அதிகரிக் கப்படும். இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார்.