Published : 04 Feb 2023 07:27 AM
Last Updated : 04 Feb 2023 07:27 AM

முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா புதிய கட்சி தொடக்கம்

சென்னை: முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பழ.கருப்பையா, சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: நேர்மை, எளிமை, செம்மை என்ற கொள்கையின் அடிப்படையில் ‘தமிழ்நாடு தன்னுரிமை கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியுள்ளோம்.

வணிகமாக மாறிவிட்ட அரசியலை சமூகப்படுத்துவதே இக்கட்சியின் நோக்கம்.காந்தியத்துவம்தான் இக்கட்சியின் மையம். கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைத்து மீனவர்களுக்கு தொல்லை கொடுப்பதைவிட, வீராணம்போல பெரிய ஏரியை உருவாக்கி அதற்கு கருணாநிதி பெயரை சூட்டலாம். இந்து சமய அறநிலையத் துறையை தமிழ் சமயங்கள் அறநிலையத் துறையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன்.

எங்கள் கட்சியின் முதல் தொண்டர்கள் மாநாடு பிப்.5-ம்தேதி காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது என்றார். இச்சந்திப்பின்போது கட்சி நிர்வாகிகள் ராஜ்குமார், முத்துராமலிங்கம், வாசி சி.ரவி, அகஸ்டின், மீனாட்சி உடன் இருந்தனர்.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x