ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் உட்பட 10 பேர் மனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன்.
Updated on
1 min read

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மற்றும் சுயேச்சைகள் உட்பட 10 பேர் நேற்று மனு தாக்கல் செய்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜன.31-ம் தேதி தொடங்கியது. மூன்றாம் நாளான நேற்று, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன் (36), கட்சி நிர்வாகிகளுடன் மாநகராட்சி அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்து, தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக கரும்புகளை ஏந்தியவாறு நாம் தமிழர் கட்சியினர் ஊர்வலமாக வந்தனர். கரும்பை எடுத்துச் செல்லக் கூடாது என போலீஸார் தெரிவித்ததை அடுத்து வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இதுதவிர 9 சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in