

ஈரோடு: கொடுமுடி அருகே மூத்த சுதந்திரப் போராட்ட தியாகி கே.முத்துசாமி (101) உடல்நலக்குறைவால் காலமானார்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடியை அடுத்த குப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் கே.முத்துசாமி. சுதந்திரப் போராட்டதியாகி. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காந்தி அறிவித்தபோது, போராட்டத்தில் ஈடுபட்டு சிறைத் தண்டனை பெற்றவர்.
உடல்நலக்குறைவு காரணமாக கரூரில் உள்ள தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்துசாமி, நேற்று அதிகாலை காலமானார்.
பொதுமக்கள் அஞ்சலி: குப்பம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி, காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏஆர்.எம்.பழனிசாமி, தமிழ்நாடுகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி உள்ளிட்ட ஏராளமானோர் முத்துசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மாலையில் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு குப்பம்பாளையத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மறைந்த சுதந்திரபோராட்ட தியாகி முத்துசாமிக்கு, காளியம்மாள் என்ற மனைவியும் காந்தி, ஜோதி என்ற இரு மகள்களும் உள்ளனர்.