அண்ணா மேம்பாலத்தில் போலீஸாருக்கு கண்காணிப்பு பணியிலிருந்து விலக்கு

அண்ணா மேம்பாலத்தில் போலீஸாருக்கு கண்காணிப்பு பணியிலிருந்து விலக்கு
Updated on
1 min read

கோடை வெயில் அதிகரித்துள்ளதால், அண்ணா மேம்பாலத்தில் காலை 11 மணி முதல் மாலை 4 மணிவரை கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதில் இருந்து போலீஸாருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அண்ணா சாலையில் உள்ள அண்ணா மேம்பாலம் அருகே அமெரிக்க துணை தூதரகம் உள்ளது. இதைத் தொடர்ந்து இப்பகுதி பாதுகாப்பு நிறைந்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

அண்ணா மேம்பாலத்தின் மேல் நின்றுகொண்டு போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். தற்போது கோடை வெயில் அதிகரித்துள்ளதால் அண்ணா மேம்பாலத்தில் நின்றவாறு கண்காணிப்பு பணியில் ஈடுபடும் போலீஸார் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் கரன் சின்ஹாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கோடைகாலம் முடியும்வரை காலை 11 மணி முதல் மதியம் 4 மணிவரை அண்ணா மேம்பாலத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதில் இருந்து போலீஸாருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in