

பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி வெளி யிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:
நடப்பு கல்வி ஆண்டில் பெண் குழந்தைகள் குறிப்பாக பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகள் தங்களை தற்காத்துக்கொள்ள வகை செய்யும் பொருட்டு பழங் குடியினர் அதிகம் வசிக்கும் நீலகிரி, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை, தருமபுரி ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 482 அரசு பள்ளிகளில் படிக்கும் 4,783 மாணவிகளுக்கு ரூ.14 லட்சம் செலவில் கராத்தே பயிற்சி அளிக்கப்படும்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயாவுக்கு ரூ.60 லட்சம் செலவில் சொந்த கட்டிடம் கட்டிக்கொடுக்கப்படும்.
பள்ளி தலைமை ஆசிரியர் களின் கல்வி மற்றும் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் வகையில் 1,140 பேருக்கு ரூ.55 லட்சம் செலவில் சிறப்பு பயிற்சி அளிக் கப்படும்.
பள்ளிக்கல்வித்துறை சார்ந்த வழக்குகளிலும், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்ந்த வழக்குகளிலும் நடவடிக்கை மேற்கொள்ள 2 சட்ட அலுவலர் பணியிடங்கள் தோற்று விக்கப்படும்.
அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் காவலர்களை விடு முறையற்ற பணியாளர்களாக அறிவித்து அவர்களின் விடுமுறை காலத்தை ஈட்டிய விடுப்பாக கணக்கிட்டு, தற்போது வழங்கப்படும் 17 நாள் ஈட்டிய விடுப்பு 30 நாட்களாக உயர்த்தப் படும்.
சென்னை கன்னிமாரா பொது நூலகத்தில் இலவச தொலைபேசி அழைப்பு எண்ணுடன் கூடிய தகவல் மேஜை ரூ.26 லட்சம் செலவில் அமைக்கப்படும்.
தமிழக அரசால் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச லேப்-டாப்புகளில், கன்னிமாரா பொது நூலகத்தில் மின்மயமாக்கப்பட்டுள்ள, காப்புரிமை கோர இயலாத, நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள், அரசு பதிப்பு நூல்கள் மற்றும் அரிய நூல்கள் ரூ.6 லட்சம் செலவில் பதிவேற்றம் செய்யப்படும்.