மே 14 முதல் எஸ்ஆர்எம் பல்கலை. கலந்தாய்வு

மே 14 முதல் எஸ்ஆர்எம் பல்கலை. கலந்தாய்வு
Updated on
1 min read

காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கிளைகள், ஹரியாணா, ஆந்திர மாநிலம் அமராவதியில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் பல இடங்களில் நடைபெற்றது.

இதற்காக 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் பதிவு செய்திருந்த நிலையில் இந்தியா முழுவதும் 118 மையங்களில் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 527 பேர் தேர்வுஎழுதினர். வெளிநாடு வாழ் இந்தி யர்களுக்காக மத்தி‌ய கிழக்குப் பிராந்தியத்தில் 3 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

பிடெக் மற்றும் எம்டெக் பிரிவுகளுக்கு நுழைவுத் தேர்வில் பெற்ற தரவரிசை அடிப்படையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். தேர்வின் முடிவுகள் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் மே 2-ம் தேதி எஸ்ஆர்எம் பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையதள மான www.srmuniv.ac.in-ல் வெளியிடப்பட்டது. பிடெக்-ல் சேருவதற்கான கலந்தாய்வை காட்டாங்குளத்தூரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் மே மாதம் 14-ம் தேதி தொடங்கி 22-ம்தேதி முடிக்கவும், எம்டெக்-கில் சேருவதற்கான கலந்தாய்வை மே 23-ம் தேதி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

விண்ணப்ப தாரர்கள் தங்கள் தரவரிசை அட்டையையும், கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதத்தையும் பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தரவரிசையில் ஒன்று முதல் 10 ஆயிரம் வரையிலான இடங்களைப் பெறும் மாணவர்கள் முதல்நாள் கலந்தாய்வுக்கு அழைக்கப் படுவர். 10 ஆயிரத்து ஒன்றில் இருந்து 70 ஆயிரம் வரையிலான இடங்களைப் பெறுபவர்கள் அடுத்தடுத்த நாள்களில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். 2017-ம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வில் பெற்ற தரநிலை அடிப்படையில் பல்கலைக்கழக நிறுவனரின் கல்வி உதவித்தொகை, முதல் நாள் கலந்தாய்வின்போது வழங்கப்படும்.

முதல் 100 இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு கல்வி மற்றும் விடுதிக் கட்டணத்தில் 100 சதவீதம் விலக்கு அளிக்கப்படும். 101 முதல் 500 வரையிலான இடங்களைப் பெறுபவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் 75 சதவீதம் விலக்கு அளிக்கப்படும். 501 முதல் 1000 வரையிலான இடங்களைப் பெறுபவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் 50 சதவீதம் விலக்கு அளிக்கப்படும்.

கலந்தாய்வுக்கான விதிமுறைகள் ஆந்திர மாநிலத்தின் அமராவதி நகரில் அமைக்கப்பட்டுள்ள புதியஎஸ்ஆர்எம் கல்லூரியில் சேருவதற்கும் பொருந்தும். இந்தக் கல்லூரியில் சேருவதற்கு பள்ளி இறுதித் தேர்வில் 60 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெறுவதோடு, எஸ்ஆர்எம் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வின் தரநிலையில் முதல் 35 ஆயிரம் இடங்களுக்குள் வருபவர்களே தகுதி பெறுவர்.

காட்டாங்குளத்தூர் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ள 2017-ம் ஆண்டு எஸ்ஆர்எம் பல்கலைக்கழக கலந்தாய்வு நிகழ்ச்சியில் பங்கேற்க, பிடெக் மற்றும் எம்டெக் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ள மாணவர்களையும் அவர்தம் பெற்றோரை யும் வரவேற்கிறோம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in