

கள்ளக்குறிச்சி: மூங்கில்துறைப்பட்டில் பட்டியலின மக்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியவர்க ளில், உண்மை குற்றவாளியை கைது செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூங்கில்துறைப்பட்டு கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் கடந்த மாதம் 18-ம் தேதி இரு சமூகத்தினுடைய மோதல் ஏற்பட்டு, கலவரமாக மாறியது.கலவரத்தில் அப்பகுதியில் உள்ள 20 வீடுகளில், குடிநீர் குழாய்கள், பொதுமக்கள் பயன்படுத்திய பாத்திரங்கள் சேதப்படுத்தப்பட்டன.
இச்செயல்களை கண்டிக்கும் வகையில் சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாலகிருஷ்ணன் பேசியது: மூங்கில்துறைப்பட்டு பட்டிய லின மக்கள் வசிக்கும் பகுதியில் சாதி மோதலுக்கு தூண்டுதலாக இருந்த முக்கிய குற்றவாளிகள் உடனடியாக கைது செய்ய வேண்டும், அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்ட நபர்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,
சாதி உணர்வை தூண்டி அரசியல் ஆதாயம் தேடும் சில சமூக விரோதிகளை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும், கலவரத்தால் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மூங்கில்துறைபட்டு சம்பவத் தில், இரு தரப்பிலும் 12 பேர்கைது செய்யப்பட்டுள்ள போதிலும், இக்கலவரத்திற்கு காரணமான முக்கிய நபர்களான இருவரை கைது செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.