கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை தொடர்ந்து சரிவு

கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை தொடர்ந்து சரிவு
Updated on
1 min read

மே மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறாதது மற்றும் சென் னையை வாட்டும் கடும் வெயில் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு மக்கள் வரத்து குறைந்ததால் அங்கு காய்கறி விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.

கோயம்பேடு காய்கறி சந் தைக்கு, தமிழக பகுதிகளை விட அண்டை மாநிலங்களான கர் நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங் களில் இருந்துதான் அதிக அளவில் காய்கறிகள் வருகின்றன. தற்போது 3 மாநிலங்களிலும் வறட்சி நிலவும் நிலையில், காய்கறி வரத்து குறைந்துள்ளது.

வழக்கமாக காய்கறி வரத்து குறையும்போது, அதன் விலை அதிகரிப்பது இயல்பு. ஆனால் தற்போது, காய்கறிகளின் விலை குறைந்து வருகிறது. கடந்த வாரம் கிலோ ரூ.15-க்கு விற்கப்பட்ட தக்காளி, ரூ.12 ஆக குறைந்துள்ளது. சாம்பார் வெங்காயம் ரூ.90-லிருந்து ரூ.85 ஆகவும், பீன்ஸ் ரூ.75-லிருந்து ரூ.60 ஆகவும், பீட்ரூட் ரூ.45-லிருந்து ரூ.20 ஆகவும், அவரை ரூ.45-லிருந்து ரூ.35 ஆக வும், பாகற்காய் மற்றும் கத்தரிக் காய் ரூ.35-லிருந்து ரூ.30 ஆகவும் குறைந்துள்ளது.

இது தொடர்பாக கோயம்பேடு சந்தை மலர், காய், கனி வியாபாரி கள் நலச் சங்க செயலர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறியதாவது:

கடந்த ஒரு மாதமாக அக்னி நட்சத்திரம் நிலவி வருவதால், இந்த காலகட்டத்தில் மக்கள் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்த்து வருகின்றனர். மேலும் வெயிலும் கடுமையாக இருப்பதால் மக்கள் வரத்து குறைவாக உள்ளது. இத னால் காய்கறி விற்பனை சரிந்துள் ளது. காய்கறிகளை நீண்ட நாட் களுக்கு வைத்திருக்க முடியாத தால் விலை குறைத்து விற்க வேண்டியுள்ளது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in