Published : 02 Feb 2023 07:34 PM
Last Updated : 02 Feb 2023 07:34 PM

சூளகிரி போராட்டம் உளவுத்துறையின் தோல்வி: இபிஎஸ் கண்டனம்

சூளகிரி அருகே சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார்

சென்னை: "கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே, கண்ணீர்புகை வீசி கட்டுப்படுத்தும் அளவிற்கு போராட்டம் வலுத்திருப்பதை உணர தவறியது உளவுத்துறையின் தோல்வி" என்று அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கிருஷ்ணகிரி,சூளகிரியில் வழக்கமாக நடக்கும் எருதுவிடும் திருவிழாவிற்கு காரணமேயின்றி அனுமதி மறுத்து,ஒசூர் நெடுஞ்சாலையே ஸ்தம்பித்துப் போகும் அளவு மக்கள் போராட்டத்திற்கு வித்திட்டுள்ள இந்த அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.

கண்ணீர்புகை வீசி கட்டுப்படுத்தும் அளவிற்கு போராட்டம் வலுத்திருப்பதை உணரத் தவறியது உளவுத்துறையின் தோல்வி.மக்கள் பிரச்சனைகளை கவனத்தில் கொள்ள வேண்டுமென இந்த நிர்வாக திறமையற்ற அரசை வலியுறுத்துகிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) February 2, 2023

முன்னதாக, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே எருதுவிடும் விழாவுக்கு அனுமதி கோரி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சாலையில் சென்ற பேருந்துகள், வாகனங்கள் மற்றும் காவல்துறை வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், தடியடி நடத்தியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x