Published : 02 Feb 2023 07:04 AM
Last Updated : 02 Feb 2023 07:04 AM
சென்னை: தமிழகத்தில் கடந்த 20 மாதங்களில்444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்துள்ளதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதரேசுவரர் கோயிலில் ராஜகோபுரம் பராமரிப்பு, சுற்றுப்பிரகாரங்களில் கருங்கல் பதிக்கும்பணிகள், மின் பணிகள், நந்தவனம்சீரமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கங்காதரேசுவர் கோயிலில் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. அதற்கான பணிகள் தற்போது தொடங்கி உள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ரூ.6.30 கோடி செலவில் தங்கத்தேர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்தவகையில் இந்த கோயிலில் தங்கத்தேருக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மழைக் காலங்களில் சுற்றுப்பகுதிகளில் பெய்யும் மழைநீர் இக்கோயில் குளத்துக்கு வந்து சேரும் வகையிலும், எப்பொழுதும் குளத்தில் தண்ணீர் இருக்கும் வகையிலும் ரூ.1.30 கோடி செலவில் சென்னை மாநகராட்சி 2.0 திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொண்டு உள்ளது.
இக்கோயிலில் கும்பாபிஷேகத்துக்கான பணிகள் ரூ.1.27 கோடி செலவில் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. 8 மாதங்களில் பணிகள்முடிவடையும். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம்நடந்திருக்கிறது. பிப்.26-ம் தேதிக்குள் மேலும் 39 கோயில்களுக்கு கும்பாபிஷேகத்துக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோயில்களில் உள்ள காலி பணியிடங்கள் குறித்து முறையாக விளம்பரப்படுத்தப்பட்டு, தகுதியானவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கோயில்களில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள் என 46 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
பேனா நினைவுச் சின்னம்... பேனா நினைவுச் சின்னத்தை சீமான் உடைக்கும் வரை எங்களதுகைகள் என்ன பூ பறித்து கொண்டிருக்குமா? எங்களுக்கும் கைகள் இருக்கிறது என்பதை சீமான் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT