

கால்வாய்க்குள் மினி பஸ் பாய்ந்ததில் 20 பேர் காய மடைந்தனர். கால்வாயில் குறைந் தளவே தண்ணீர் ஓடியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், மணலிக்கரையில் இருந்து தக்கலைக்கு செவ்வாய்க் கிழமை காலை மினி பஸ் ஒன்று 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. மினி பஸ்ஸை பெருஞ்சிலம்பு பகுதியை சேர்ந்த மகேஷ் (32) என்பவர் ஓட்டி வந்தார்.
ஈத்தவிளை பட்டணங்கால் வாய் பாலத்தில் வந்தபோது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடுவதற்காக பஸ்ஸை ஓட்டுநர் ஒதுக்கியிருக் கிறார். ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்த மினி பஸ், பட்டணங் கால்வாய்க்குள் பாய்ந்தது.
பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தக்கலை தீயணைப்பு நிலையத்தினர் மற்றும் கொற்றிக் கோடு போலீஸாரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கால் வாயில் இடுப்பளவு மட்டுமே தண்ணீர் ஓடியதால் அசம்பாவிதம் ஏற்பட வில்லை. விபத்தில் மினி பஸ் ஓட்டுநர் மகேஷின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. பஸ்ஸில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு, தனியார் மருத்துவ மனைகளில் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று திரும்பினர். விபத்து குறித்து கொற்றிக்கோடு போலீஸார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.