வடலூர் ராமலிங்கர் நினைவு தினம்: பிப். 5-ம் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவு

வடலூர் ராமலிங்கர் நினைவு தினம்: பிப். 5-ம் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவு
Updated on
1 min read

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு: வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை ஒட்டி பிப்.5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் பார்கள், கிளப்புகளைச் சேர்ந்த பார்கள், ஓட்டல்களைச் சேர்ந்த பார்கள் உள்ளிட்டவை கண்டிப்பாக மூடப்பட வேண்டும். அன்று மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விற்பனை விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in