

மூவரசம்பட்டு ஏரி மற்றும் குளம் ரூ.35 லட்சம் செலவில் தூர்வாரி விரைவில் சீரமைக்கப்படும் என தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
சபரி பசுமை அறக்கட்டளை யின் நிறுவனர் வி.சுப்பிரமணி, பொருளாளர் வி.ராமாராவ் ஆகியோர் ஆலந்தூர் தொகுதி எம்எல்ஏ தா.மோ.அன்பரசனிடம் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.
இது தொடர்பாக எம்எல்ஏ அன்பரசனிடம் கேட்டபோது, ‘கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் ஆலந்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஏரி மற்றும் குளங்களை தேர்வு செய்து அவற்றை தூர்வாரி சீரமைக்க ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஐய்யப்பன்தாங்கல், மவுலிவாக்கம் உட்பட மொத்தம் 9 இடங்களில் குளங்கள் தேர்வு செய்துள்ளோம்.
அதேபோல், ஆதம்பாக்கம் ஏரியை தூர்வாரி சீரமைக்க திட்டமிட்டுள்ளோம்.
இதற்கான பணிகளை இந்த மாத இறுதியில் தொடங்கவுள்ளோம். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை காரணமாக தற்போது மூவரசம்பட்டு ஏரி மற்றும் குளத்தை ரூ.35 லட்சத்தில் சீரமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும்’ என்றார்.