கோவில்பட்டி | ஆசிரியர் இடமாற்றத்தை கண்டித்து சிதம்பரம்பட்டியில் மாணவர்கள் போராட்டம்

கோவில்பட்டி | ஆசிரியர் இடமாற்றத்தை கண்டித்து சிதம்பரம்பட்டியில் மாணவர்கள் போராட்டம்
Updated on
1 min read

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே சிதம்பரம்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவருக்கும், மாணவி ஒருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மாணவியின் உறவினர்கள் தாக்கியதாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மாணவர் அனுமதிக்கப்பட்டார்.

இப்பிரச்சினையின் தொடர்ச்சியாக பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி, அறிவியல் ஆசிரியை பொன்மலர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் ஆசிரியை பொன்மலரை மீண்டும் அதே பள்ளியில் பணியமர்த்த வலியுறுத்தி மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கயத்தாறு வட்டாட்சியர் சுப்புலட்சுமி , கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், தலைமை ஆசிரியை இடமாறுதல் செய்யப்படவில்லை. பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியைக்கு பதிலாக வேறு ஆசிரியை உடனே நியமிக்கப்படுவார் என, அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இப்பள்ளி 10-ம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது.

இதற்கு முழுக்காரணம் ஆசிரியை பொன்மலர் தான். எனவே, அவரை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என, கிராம மக்கள் உறுதியாக கூறினர். இதுதொடர்பாக 6-ம் தேதி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பின்னர் மாணவர்களை பள்ளிக்கு பெற்றோர் அனுப்பினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in