Published : 19 May 2017 11:16 AM
Last Updated : 19 May 2017 11:16 AM

செப்டிக் டேங்க்குகளில் இருந்து உற்பத்தியாகும் ‘காஸ்’ மூலம் சமையல் செய்யும் திட்டம்: மாவட்டத் தலைநகரங்களில் சமுதாய சமையல்கூடம்

‘செப்டிக் டேங்க்’ (மனித கழிவுகள்) மூலம் உற்பத்தியா கும் வாயுவிலிந்து சமையல் செய்யும் விதமாக மாவட்ட த்தலை நகரங்களில் சமுதாய சமையல் கூடம் அமைக்க மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்துவருகின்றன.

தமிழகத்தில் மாவட்டத்த லைநகரங்களாக உள்ள பெரும் பாலான மாநகராட்சி, நகராட்சிகளில் பாதாளசாக்கடைத்திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளும் பல ஊர்களில் தொடர்ந்து நடை பெற்றுவ ருகின்றன. இதில் பாதாளசாக்கடை திட்டம் செயல் படுத்தப்படாத பகுதிகளில் பொதுக்கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டு ‘செப்டிக் டேங்க்’குகள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த செப்டிக் டேங்க்குகளில்(மனித கழிவுகள்) இருந்து உற்பத்தியாகும் ‘காஸ்’ மூலம் சமையல் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கழிப்பறையில் இருந்து சிறிது தூரத்தில் வாயுக்கலன் அமைக்கப்படுகிறது.

செப்டிக் டேங்கில் உற்பத்தியாகும் வாயு இந்த கலனில் சேகரமாகும். இதிலிருந்து குழாய் மூலம் அருகில் அமைக்கப்படவுள்ள சமுதாய சமையல் கூடத்திற்கு செல்லும். இங்கு பத்துக்கும் மேற்பட்ட காஸ் அடுப்புகள் வைக்கப்பட்டிருக்கும். அப்பகுதியை சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளுக்கான உணவு சமைக்கும் பணிகளை சமுதாய சமையல் கூடத்தில் செய்து தங்கள் வீடுகளுக்கு எடுத்துச்செல்லலாம். இதற்காக இவர்கள் கட்டணம் ஏதும் செலுத்ததேவையில்லை.

இந்த திட்டம் தமிழத்தில் உள்ள மாவட்டத்தலைநகரங்களில் செயல்படுத்தப்படவுள்ளது.

இதுகுறித்து திண்டுக்கல் மாநகராட்சி பொறியாளர் கணேசன் கூறியதாவது: திண்டுக்கல்லில் பாதாளசாக்கடைத்திட்டம் செயல்படுத்த முடியாதபகுதிகளில் உள்ள பொதுசுகாதார வளாகங் களுக்கு அருகே வாயுகலன், சமையல் கூடம் அமைக்க இடவசதி கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இத்திட் டத்திற்காக அரசு ரூ.20 லட்சம் ஒதுக்கியுள்ளது. முதற்கட்டமாக மாவட்டத்தலைநகரங்களில இந்த திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது.

திண்டுக்கல் மாநகராட்சியில் இத்துடன் சேர்த்து வேடபட்டி பகுதியில் உள்ள எரிவாயு மயானத்தை செப்டிக் டேங்க் கழிவுகளில் இருந்து உற்பத்தியாகும் வாயுவை கொண்டு செயல்படுத்த ரூ.40 லட்சம் மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது. எரிவாயு மயானம் அருகே உள்ள பொதுசுகாதாரவளாகத்தில் இருந்து எரிவாயு மயானத்திற்கு தேவையான காஸ் எரிவாயு கலனில் சேமித்துவைக்கப்பட்டு தேவையான போது பயன் படுத்தப்படும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x