சென்னை | பாஜக நிர்வாகிகள் 5 பேர் தற்காலிக நீக்கம்

சென்னை | பாஜக நிர்வாகிகள் 5 பேர் தற்காலிக நீக்கம்
Updated on
1 min read

சென்னை: பாஜக நிர்வாகிகள் 5 பேர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை மேற்கு மாவட்டத்தில் கடந்த 29-ம் தேதி மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது மாவட்ட துணைத் தலைவர் சி.பிரகாஷ், நெசவாளர் பிரிவின் மாநில செயலாளர் மிண்ட் ரமேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.வி.சசிதரன், பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் எம்.புருஷோத்தமன், மாநில செயற்குழு உறுப்பினர் சென்னை சிவா உள்ளிட்டோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர்.

இதையடுத்து அவர்கள் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுகின்றனர். எனவே கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள்அவர்களிடம் கட்சி சார்பாக எந்ததொடர்பும் வைத்துக் கொள்ளவேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in