ஜி.எஸ்.டி. வரி விதிப்பை எதிர்த்து மாவட்ட தலைநகரங்களில் 30-ம் தேதி ஆர்ப்பாட்டம்: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு

ஜி.எஸ்.டி. வரி விதிப்பை எதிர்த்து மாவட்ட தலைநகரங்களில் 30-ம் தேதி ஆர்ப்பாட்டம்: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு
Updated on
1 min read

ஜி.எஸ்.டி. வரி விதிப்பை எதிர்த்து தமிழகத்தில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வரும் 30-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.

வணிகர் சங்கங்களின் பேர மைப்பு நிர்வாகிகள் மற்றும் தமிழக தொழில், வணிக அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகி கள் ஆலோசனைக் கூட்டம் கோவை யில் நேற்று நடைபெற்றது. பேர மைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை வகித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் 1200-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு 5 முதல் 28 சதவீதம் வரை வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள், இஞ்சி, பூண்டு உள் ளிட்ட அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கும் வரி விதிக்கப்பட உள்ளது. ஏற்கெனவே வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள 500-க்கும் மேற் பட்ட பொருட்கள் வரி விதிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்த கடுமையான வரி விதிப்பு வணிகர்களை மட்டுமின்றி, பொதுமக்களையும் பெரிதும் பாதிக்கும். அதிகபட்சமாக 42 சதவீதம் வரை விலை உயர வாய்ப்பு உள்ளது. இந்த வரி விதிப்பைக் கண்டித்து வரும் 30-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

தமிழகத்தில் சுமார் 21 லட்சம் கடைகள் உள்ளன. ஒரு கோடி பேருக்கு மேல் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் 5 ஆண்டுகளில் 5 லட்சத் துக்கும் மேற்பட்ட சிறு, நடுத்தர கடைகள் மூடப்பட்டுவிடும் நிலை உள்ளது. லட்சக்கணக்கானோர் வேலை இழப்பார்கள் என்றார்.

மருந்து கடைகள் அடைப்பு

இதற்கிடையே, ஆன்லைன் மருந்து வணிகத்தை கண்டித்து மே 30-ம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய கடையடைப்புப் போராட்டத்தையொட்டி, தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் மருந்துகடை கள் மூடப்படும் என மருந்து வணி கர்கள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்துள் ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in