Published : 01 Feb 2023 04:17 AM
Last Updated : 01 Feb 2023 04:17 AM

தி.மலை ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் அதிமுக நிர்வாகியின் மனைவி தர்ணா

கணவரை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக கிளை செயலாளரின் மனைவி சவுமியா. படம் :இரா.தினேஷ்குமார்.

திருவண்ணாமலை: கணவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி திருவண் ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்தினர் மற்றும் ஆதர வாளர்களுடன் அதிமுக கிளை செயலாளர் மனைவி சவுமியா நேற்று தர்ணாவில் ஈடுபட்டார்.

இது குறித்துஅவர், ஆட்சியர் பா.முருகேஷுக்கு அளித்துள்ள மனுவில், “திருவண்ணாமலை அடுத்த தண்டரை அருகே சு.நல்லூர் கிராமத்தில் அதிமுக கிளை செயலாளராக எனது கணவர் பிரகாஷ் உள்ளார். எங்களது குல தொழில் விவசாயம். ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு, அதிமுகவைச் சேர்ந்த வீரமணி போட்டியிட்டார்.

அவருக்கு ஆதரவாக எனது கணவர் தேர்தல் பணியாற்றினார். இதனால், எதிர் தரப்புக்கும், எனது கணவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில், எங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பயிர்களுக்கு கடந்த ஜனவரி 17-ம் தேதி தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த கணவர் பிரகாஷை, முன்விரோதம் காரணமாக எதிர் தரப்பைச் சேர்ந்த முருகன், அவரது மகன் பரமன், மணிகண்டன் ஆகிய 3 பேர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

வலியால் துடித்த எனது கணவரை, கிராம மக்கள் மீட்டனர். பின்னர் அவர், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வரும் கண வரிடம், வெறையூர் காவல் துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

ஆனால், தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்த பிறகு, கடந்த மாதம் 21-ம் தேதி இரு தரப்பினரை அழைத்து விசாரணை நடத்தாமல், தாக்கியவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு, எனது கணவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். சம்பவ இடத்தில் இல்லாத நபர் மீதும் வழக்கு பதிவாகியுள்ளது.

அதேநேரத்தில் தாக்கியவர்கள் மீது சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். மேலும், எனது குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். பின்னர் அவர்கள், வெறையூர் காவல்துறையினரை கண்டித்து முழக்கமிட்டனர்.

இதையடுத்து, அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்தது. பின்னர் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினியிடம் மனு அளித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x