Published : 01 Feb 2023 04:17 AM
Last Updated : 01 Feb 2023 04:17 AM
வேலூர்: வேலூருக்கு வரும் முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து, நோட்டீஸ் அச்சடித்து வெளியிட இருந்த சிவசக்தி சேனா இந்து மக்கள் இயக்க நிறுவனரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வேலூரில் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அரசின் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்க இரண்டு நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வேலூர் வருகை தரவுள்ளார்.
இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வேலூர் வரும் முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசக்தி சேனா இந்து மக்கள் இயக்க நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் ராஜகோபால் என்பவர் நோட்டீஸ் அச்சடித்து அதை ஒட்டவும், சமூக வலைதளங்களில் பரப்பவும் முடிவு செய்திருந்தார். இது தொடர்பாக அவர் முகநூல் பக்கத்திலும் வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.
இந்த தகவலை அடுத்து திமுக சமூகவலைதள பிரிவின் மாவட்ட துணை அமைப்பாளர் செந்தில்குமார், பாகாயம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் ராஜகோபால் என்பவரை பாகாயம் காவல் துறையினர் நேற்று முன்தினம் இரவு கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT