பெட்ரோல் பங்க்குகளுக்கு ஞாயிறு விடுமுறை கிடையாது

பெட்ரோல் பங்க்குகளுக்கு ஞாயிறு விடுமுறை கிடையாது
Updated on
1 min read

தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

எரிபொருள் பயன்பாட்டினை குறைக்கும் விதத்தில் வாரத்தில் ஒருநாள் ஞாயிறுதோறும் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களுக்கு மே 14-ம் தேதி முதல் விடுமுறை அளிப்பதென அறிவிப்பு செய்திருந்தோம்.

இந்த அறிவிப்புக்குப் பிறகு பெட்ரோலியத்துறை அமைச்சர், பிரதமரின் வேண்டுகோளை ஏற்று ஞாயிறுதோறும் விடுமுறை என்ற நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டு வழக்கம்போல் சில்லரை விற்பனை நிலையங்கள் தினசரி இயங்கும்.

மேலும், இன்று (10-ம் தேதி) ஒருநாள் கொள்முதல் நிறுத்தப் போராட்டம் செய்வதென்றும், வரும் 15-ம் தேதி முதல் வேலை நேர குறைப்பு ஆகிய போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in