சென்னை மெட்ரோ பணிகள்: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சாலையில் பிப்.1 முதல் பிப்.7 வரை போக்குவரத்து மாற்றம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: போட் கிளப் மெட்ரோ ரயில் பணிகள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சாலையில் மேற்கொள்ள இருப்பதால், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு வார காலத்திற்கு 01.02.2023 முதல் 07.02.2023 வரை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தகவல்: போட் கிளப் மெட்ரோ ரயில் பணிகள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சாலையில் மேற்கொள்ள இருப்பதால், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு வார காலத்திற்கு 01.02.2023 முதல் 07.02.2023 வரை சோதனை அடிப்படை அடிப்படையில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்களைச் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

  • பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சாலையில் ஜி.கே. மூப்பனார் மேம்பால சந்திப்பிலிருந்து டி.டி.கே சாலையை நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் வழக்கம் போல் செல்லலாம். டி.டி.கே சாலை சந்திப்பிலிருந்து ஜி.கே மூப்பனார் மேம்பால சந்திப்பை நோக்கி வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
  • மாநகர பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் மந்தைவெளியிலிருந்து கோட்டூர்புரம் மேம்பாலத்தை நோக்கி செல்லும் வாகனங்கள் அடையார் கிளப் கேட் சாலை, ஏ.பி.எம் அவின்யூ மற்றும் டர்ன் புல்ஸ் சாலை விரிவாக்கம் வழியாக இடது புறமாக செல்லலாம்.
  • மந்தைவெளியிலிருந்து நந்தனம் சிக்னல் சந்திப்பை நோக்கி செல்லும் மாநகர பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் டி.டி.கே சாலை ஶ்ரீராம் நகர் தெற்குத் தெரு மற்றும் ஜி.கே. மூப்பனார் மேம்பால சந்திப்பு வழியாக நந்தனம் செல்லலாம்.

வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in