சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு க்யூ ஆர் கோடுடன் கூடிய வாகன பாஸ் விநியோகம்

வாகன பாஸ்
வாகன பாஸ்
Updated on
1 min read

சென்னை: சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு க்யூ ஆர் கோடுடன் கூடிய வாகன பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு சட்டமப்பேரவை மற்றும் நாடாளுமன்ற மூலம் பாஸ் வழங்கப்படும். இது போன்று சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களின் வாகனங்களுக்கும் பாஸ் வழங்க வேண்டும் என்று ஒரு சில கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்து இருந்தனர்.

இதனை ஏற்று சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு இன்று (ஜன.30) வாகன பாஸ் வழங்கப்பட்டது. குறிப்பாக க்யூ ஆர் கோடுடன் இந்த பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் இருக்கும் க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால், கவுன்சிலர் பெயர், வார்டு எண், மண்டலம், முகவரி, தொடர்பு எண், செல்லுபடியாகும் காலம் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in