

தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் கே.பழனிசாமி தலைமை யில் நேற்று 2 மணி நேரம் நடந்தது. இதில், விளைநிலங்கள் பத்திரப்பதிவு, ரியல் எஸ்டேட் மசோதா நிறைவேற்றம், மானிய கோரிக்கை விவாதம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு தொடர்பாக பேச குழுக் கள் அமைக்கப்பட்டும், இதுவரை பேச்சுவார்த்தை தொடங்க வில்லை. தற்போது இரு தரப்பும் ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகின்றனர். இதனால், இணைப்பு முயற்சி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த பரபரப்பான சூழலில் தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் கே.பழனிசாமி தலைமை யில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டம், பகல் 1 மணி வரை நீடித்தது. இதில் முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை செயலர் கே.சண்முகம், முதல்வ ரின் செயலர்கள் ஷிவ்தாஸ் மீனா, விஜயகுமார் மற்றும் ஜெய முரளிதரன் ஆகியோர் பங்கேற்றனர்.
பத்திரப் பதிவு தடை..
அங்கீகாரமற்ற மனைகளை பத்திரப்பதிவு செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறித்து அமைச் சரவையில் முக்கியமாக விவாதிக் கப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசா ரணைக்கு வந்தபோது, ‘அரசு புதிய வரைவு விதிகளை உரு வாக்கி, அமைச்சரவையின் ஒப்புத லுக்கு அனுப்பி வைத்துள்ளது’ என அரசு தலைமை வழக்கறி ஞர் தெரிவித்திருந்தார். அந்த வரைவு விதிகள் குறித்து அமைச் சரவையில் விவாதிக்கப்பட்டு ஒப்பு தல் வழங்கப்பட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரி வித்தன.
மேலும், துறைகள் வாரியான மானியக் கோரிக்கைகளை நிறை வேற்றுவதற்காக சட்டப்பேர வையை எப்போது கூட்டுவது, எத்தனை நாட்கள் விவாதத்தை நடத்துவது என்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப் பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது. அனைத்து துறை களிலும் அறிவிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள், ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பாகவும் அமைச்சர்களுடன் முதல்வர் கே.பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.
மத்திய அரசின் புதிய ரியல் எஸ்டேட் ஒழுங்குபடுத்தும் சட் டத்தை தமிழகம் இன்னும் அமல்படுத்தவில்லை. இச்சட் டத்தை அமல்படுத்த தமிழக சட்டப்பேரவையில் மாநில சட்டம் பிறப்பிக்க வேண்டும். இதற் கான வரைவு சட்டம் தயாரிக் கப்பட்டுள்ளது. இதை சட்டப் பேரவையில் வைப்பதற்கான அனுமதி அமைச்சரவை கூட்டத் தில் பெறப்பட்டுள்ளது.
நீட் தேர்வு விலக்கு..
இதுதவிர, மத்திய அரசிடம் வறட்சி நிவாரணம் கூடுதலாக கேட்டுப் பெறுவது, நீட் தேர்வுக்கு விலக்களிக்க வலியுறுத்துவது குறித்தும் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டுள்ளது. டாஸ் மாக் கடைகள் திறப்பதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருப்பதால் அதை சமாளிப்பது குறித்தும், வருவாயை பெருக்க மாற்று வழிகளை கண்டறிவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட் டது. தமிழகத்தில் மத்திய மோட் டார் வாகன சட்டத் திருத்தம் சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது. அது தொடர்பாகவும் விவாதிக் கப்பட்டதாக தெரிகிறது.
அங்கீகாரமற்ற மனைகளை பத்திரப்பதிவு செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறித்து அமைச்சரவையில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.