முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கு பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, சிறப்பு மருத்துவக் குழுவால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவசர சிகிச்சைப் பிரிவுக்கு (ஐசியூ) அவர் மாற்றப்பட்டார்.
இதயம் இயங்குவதற்கு உதவக் கூடிய கருவியின் துணையுடன் இருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்ச்சியாக தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தொடர்பாக அவ்வப்போது அப்போலோ மருத்துவமனையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் பகிரப்பட்டு வருகிறது.
மேலும், லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலேவை தொடர்புகொண்டு, அவரது ஆலோசனையின் அடிப்படையிலும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
"முதல்வரின் உடல்நிலையை எங்களது மருத்துவர்கள் கூர்ந்து கண்காணித்து வருகின்றனர். மருத்துவர்கள் தங்களால் இயன்றவரையில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்" என்று அப்போலோ மருத்துவமனையின் சங்கீதா ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் 2.45 மணியளவில் பதிவிட்டுள்ளார்.
முந்தையச் செய்திப் பதிவுகள்:
இதனிடையே, சென்னை - அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன்னுடைய அத்தையைப் பார்க்க தன்னை அனுமதிக்கவில்லை என்று முதல்வர் ஜெயலலிதாவின் உறவினர் தீபா ஜெயகுமார் ஆவேசமாக கூறினார். | விரிவான செய்தி > >அத்தையை பார்க்க அனுமதிக்கவில்லை: மருத்துவமனையில் ஜெ. உறவினர் தீபா ஆவேசம்
ஆளுநர் விசாரிப்பு
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து விசாரிக்க, இரவு 12 மணியளவில் அப்போலோ மருத்துவமனைக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் வந்தடைந்தார். அப்போலோ மருத்துவமனையில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் கேட்டறிந்துவிட்டுச் சென்றார்.
தலைவர்கள் விழைவு
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் பூரண நலம் பெற வேண்டும் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். | விரிவான செய்திக்கு > >முதல்வர் ஜெயலலிதா நலம் பெற தலைவர்கள் விழைவு

*இரவு 11 மணி நிலவரப்படி, தமிழகத்துக்கு மத்திய பாதுகாப்பு படையை அனுப்புமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசிடம் இருந்து எவ்வித கோரிக்கையும் வரவில்லை என்று அதிகாரி ஒருவர் 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழிடம் தெரிவித்தார். சென்னைக்கு விரைந்திடுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து எந்தத் தகவலும் தங்களுக்கு இதுவரை வரவில்லை என்று சி.ஆர்.பி.எஃப். இயக்குநர் ஜெனரல் கே.துர்கா பிரசாத் தெரிவித்தார்.

இதனிடையே, திங்கள்கிழமை காலை 7 மணிக்கு அனைத்து காவல்துறை அதிகாரிகளும், காவலர்களும் பணிக்கு ஆஜராகுமாறு தமிழ்நாடு காவல்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

முந்தையச் செய்திப் பதிவுகள்:

அப்போலோ மருத்துவமனை செய்திக் குறிப்பு:

"சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டது. அவருக்கு மருத்துவர் நிபுணர்கள் சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்.

இதய நோய் சிகிச்சை நிபுணர்கள், நுரையீரல் சிகிச்சை நிபுணர்கள், தீவிர சிகிச்சை பிரிவு நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை விரைந்தார் ஆளுநர்

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து சென்னை விரைந்தார். இரவு 11 மணியளவில் அவர் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவர், அப்போலோ மருத்துமனைக்குச் சென்றுள்ளார்.

இதனிடையே, அலுவல் நிமித்தமாக மதுரை சென்றிருந்த காவல்துறை டிஜிபி ராஜேந்திரன் சென்னை விரைந்துள்ளார்.

குடியரசுத் தலைவர் கவலை

முதல்வரின் உடல்நிலை குறித்து பலகட்சித் தலைவர்களும் விசாரித்து வருகின்றனர். மாரடைப்பு குறித்த செய்தியை அறிந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கவலை தெரிவித்துள்ளார்.

"தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு என்பதைக் கேள்விப்பட்டது கவலையளிக்கிறது. அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

இதனிடையே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் "தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து மிகவும் கவலை கொள்கிறேன். தமிழ்நாட்டில் இருக்கும் எனது மற்ற நண்பர்களைப் போல நானும் அவர் சீக்கிரம் குணமாக பிரார்த்திக்கிறேன். இறைவன் அவரை ஆசிர்வதிக்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அப்போலோ மருத்துவமனை பகுதியில்...

முன்னதாக, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை ஆயிரம் விளக்கு - க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பநிலையில் அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் அவருக்கு நுரையீரலில் நோய் தொற்று ஏற்பட்டதை மருத்துவமனை அதிகாரபூர்வமாக தெரிவித்தது.

இதனையடுத்து, அவருக்கு லண்டன் மருத்துவர் ரிச்சட் பியெல், எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்களும் சிகிச்சை அளித்து வந்தனர். அண்மையில்தான் முதல்வர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், இன்று (ஞாயிறு) மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதனையடுத்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் அப்போலோ மருத்துவமனை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.