தஞ்சை: நேரடி கொள்முதல் நிலையம் வேண்டி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் | படம் . ஆர் . வெங்கடேஷ்
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் | படம் . ஆர் . வெங்கடேஷ்
Updated on
1 min read

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம், விழுதியூர் ரங்கநாதபுரம் இரும்புதலை வனக்குடி திருப்பாலைக்குடி உள்ளிட்ட 19 கிராமங்களில் இருந்து சுமார் 5000 ஏக்கர் சம்பா தாளடி சாகுபடி செய்துள்ளனர்.

தற்போது அறுவடை தொடங்கியுள்ள நிலையில், அறுவடை செய்த நெல் மூட்டைகளை ரங்கநாதபுரத்தில் உள்ள நேரடி நெல் கொள் முதல் நிலையத்திற்கு சுமார் 2000 மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஆனால், நேரடி கொள்முதல் நிலையம் திறக்காததால் கடந்த ஒரு வாரமாக நெல் மூட்டையில் தேங்கி கிடந்தது.

தற்போது பெய்து வரும் கடும் பணியினால் நெல் மணிகள் வீணாகும் என்பதை அறிந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கலை அதிகாரிகளிடம் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் வலியுறுத்தினர்.

ஆனால், நேரடி கொள்முதல் பிறக்காது கண்டித்து இன்று காலை தஞ்சாவூர் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதல்நிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் ஆர்.செந்தில்குமார் தலைமையில் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் எம். வெங்கடேசன், ஒன்றிய நிர்வாகிகள் எஸ், திருநாவுக்கரசு, டி.ராஜேந்திரன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in