போலீஸ் தாக்குதலில் இளைஞர் பலி: உயர்மட்ட விசாரணை தேவை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

போலீஸ் தாக்குதலில் இளைஞர் பலி: உயர்மட்ட விசாரணை தேவை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
Updated on
1 min read

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

சேலம் மாவட்டம் இளம் பிள்ளை அருகில் உள்ள கோனேரிப்பட்டியைச் சேர்ந்த சரவணகுமார் (21) இருசக்கர வாகனத்தில் சென்றபோது வாகன சோதனைக்காக அவரை மகுடஞ்சாவடி காவலர் ஒருவர் லத்தியால் தாக்கியுள் ளார். இதனால் நிலைதடு மாறி விழுந்து எதிரே வந்த லாரியில் சிக்கி சம்பவ இடத்தி லேயே சரவணகுமார் உயிரிழந் துள்ளார். இந்த சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

இதற்கு காரணமான காவல் துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, கைது செய்ய வேண்டும். அவர்களை பணியிடை நீக்கம் செய்து சட்டரீதியான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும்.

இந்த சம்பவத்தின்போது காவல் துறையின் நடவடிக் கைக்கு எதிர்ப்பு தெரிவித்த 92 பேர் காவல் துறையினரைத் தாக்கியதாக கைது செய்யப்பட் டுள்ளனர். அதனால் மக்களிடம் பயமும், பதற்றமும் ஏற்பட்டுள் ளது. 92 பேர் மீது பதிவு செய் யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற்று, அனைவரையும் நிபந் தனையின்றி விடுவிப்பதுடன் நடந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in