

தமிழகத்தின் பரபரப்பான அரசி யல் சூழலுக்கு இடையில், பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் திடீரென நேற்று டெல்லி சென்றார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அன்று இரவே முதல்வராக பதவியேற்றார். முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் தமிழக ஆளுநர் சி.எச்.வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து, அதிமுக வின் பொதுச் செயலாளர் யார் என்பதில் குழப்பம் நீடித்து வரு கிறது. ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து ஆலோசித்து வரு கின்றனர். அதிமுகவின் தலைமையை ஏற்கப் போவது யார் என்பதை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும், பாஜக தலைமையிலான மத்திய அரசும் கவனித்துக் கொண்டிருக்கிறது. தமிழக அரசியலில் இது போன்ற சூழல் நிலவும் நிலையில், நேற்று காலை 11.30 மணிக்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் டெல்லி புறப்பட்டுச் சென் றார். இது அரசியல் வட் டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க டெல்லி சென்ற அவர், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார்.