அழிந்துவரும் விவசாய கருவிகளில் நிலைத்து நிற்கும் மண்வெட்டி

அழிந்துவரும் விவசாய கருவிகளில் நிலைத்து நிற்கும் மண்வெட்டி
Updated on
2 min read

இன்று உலக விவசாயிகள் தினம்

பல்வேறு மாற்றங்களால் வேளாண் கருவிகள் அழிந்துவரும் நிலையில் மாற்றமின்றி நிலைத்து நிற்கும் கருவியாக மண்வெட்டி உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

விவசாயத்தையே முதுகெலும்பாகக் கொண்டுள்ள நம் நாட்டில் பாரம்பரியமாக கலப்பை, மண் வெட்டி, ஏற்றம் என பல்வேறு கருவிகள் விவசாயத்துக்குப் பயன் படுத்தப்பட்டன.

மழை குறைவு, இடுபொருட்கள் விலை உயர்வு, ஆள் பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணங்களால் நம் கண்முன்னே விவசாயத்தின் பரப்பளவு நாளுக்கு நாள் குறைந்து வருவதை அறிய முடிகிறது.

இந்நிலையில், விவசாயத்தில் டிராக்டர்களின் பயன்பாடு அதிகரித் ததால் ஏர் பூட்டி உழுவது குறைந்துவிட்டது. இதேபோல உழவு, விதைப்பு, நடவு, அறுவடை என பெரும்பாலான பணிகள் இயந்திரமயமாக்கப்பட்டுள்ளன. விவசாயத்தை முற்றிலுமாக இயந் திரமயமாக்குவதற்காக, அரசும் கோடிக்கணக்கில் மானியத் திட்டங்களைச் செயல்படுத்தி வரு கிறது.

விவசாயத்தில் பல்வேறு வேளாண் கருவிகள் வந்திருந் தாலும் விவசாயியின் தனித்திற மையை வெளிப்படுத்தும் விதமாக உள்ள மண்வெட்டிக்கு மாற்றாக எதுவும் வரவில்லை.

அந்த அளவுக்கு பாரம்பரியமாக விவசாயிகளால் பயன்படுத்தப்பட்டு வரும் கருவிகளில் ஒன்றாக மண்வெட்டி உள்ளது என விவசாயிகள் கூறுகின்றனர்.

எஞ்சியுள்ள முக்கிய கருவி

இதுகுறித்து கீரமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி கே.பன்னீர் என்ற செல்வராஜ் கூறியபோது, “பாரம்பரியமாகவே மண்வெட்டி களைப் பயன்படுத்தி வரப்பு வெட் டுதல், வாய்க்கால் அமைத்தல், குழி பறித்தல், கிணறு வெட்டு தல் போன்ற பணிகள் மேற்கொள் ளப்படுகின்றன. கலப்பை, மண் வெட்டி போன்ற கருவிகளோடு மாடுகளை வளர்க்கும் குடும்பம் தான் விவசாயக் குடும்பமாக கருதப்பட்டது.

ஆனால், தற்போது மாடு, கலப்பை இவைகளெல்லாம் விவ சாயப் பணிகளில் இருந்து பல்வேறு காரணங்களால் விலகி யதையடுத்து, பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த கருவிகளில் தற்போது எஞ்சி இருக்கும் முக்கியக் கருவிகளில் ஒன்றாக மண்வெட்டி உள்ளது.

ஒரு வருடத்துக்கு ஒரு மண்வெட்டியைக் கொண்டு வேலை செய்தே அதை தேய்த்துவிடுவோம். மண்வெட்டி பிடித்து வேலை செய்து பழகிவிட்டால் எவ்வளவு நேரம் வேலை செய்தாலும் அலுப்பு தெரியாது.

இந்தக் கருவிதான் தற்போது விவசாயத்தை தாங்கி நிற்கிறது. இந்தக் கருவி இருக்கும் வீடுதான் விவசாயியின் அடையாளமாக திகழ்கிறது. எனவே, இந்தக் கருவி வீடுகளில் பயன்பாடின்றி முடங்கினால் அது விவசாயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலமாக மாறும்” என்றார்.

விவசாயத்தின் அளவுகோல்

இதுகுறித்து மண்வெட்டி தயாரிக்கும் தொழிலாளி கீரமங்கலத்தைச் சேர்ந்த முருகன் கூறியபோது, “முன்னர் உழவுக்கான மரக்கலப்பைகள் அதிகமாக தயாரித்து வந்தோம். தற்போது டிராக்டர்களின் வருகையால் மரக்கலப்பைகள் தயாரிக்கப்படுவதில்லை.

ரூ.600-க்கு விற்பனை

மற்ற கருவிகளுடன் ஒப்பிடும்போது, மண்வெட்டி அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஒரு மண்வெட்டியை ரூ.600-க்கு விற்பனை செய்கிறோம். மண்வெட்டிகளைத் தற்போதைய இளைஞர்களும் பயன்படுத்தி வருவதால் அவ்வளவு எளிதில் இது வழக்கொழிந்து போய்விடாது. விவசாயமும் ஓரளவுக்கு நிலைத் திருக்கும். மண்வெட்டிதான் விவசாயத்தின் அளவுகோலாகப் பார்க்கப்படுகிறது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in