தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
Updated on
1 min read

தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 நாள் மாநிலக் குழுக் கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் தலைமையில் சென்னையில் நேற்று தொடங்கியது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப் பினர் பிரகாஷ் காரத், மாநிலச் செய லாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர்கள் கே.வரதராஜன், டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, அ.சவுந் திரராசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பாவது: தமிழ்நாட்டில் மோசமான வறட்சி ஏற்பட்டு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். விவசாயிகள் தற்கொலைகள் மற்றும் அதிர்ச்சி மரணங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து நிவாரண நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திரு வாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு விவசாயிகள் சங்கம், விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற முற்றுகை போராட் டத்தின்போது மகாலிங்கம் என்ற விவசாயி மாரடைப்பால் மரண மடைந்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு கோரிக்கையினை நிறைவேற்றி விவசாயி களையும், விவசாயத் தொழிலாளர் களையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in