சென்னையில் ரயில் சேவைகளில் பாதிப்பில்லை

சென்னையில் ரயில் சேவைகளில் பாதிப்பில்லை
Updated on
1 min read

தமிழகத் தலைவர் ஜெயலலிதா மறைவையடுத்து பேருந்துகள் இயக்கப்படாவிட்டாலும் சென்னையில் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டன.

சென்னை மாநகரில் ஆங்காங்கே சில தனியார் வாகனங்கள் தென்பட்டனவே தவிர, பெரும்பாலும் சென்னை நகரம் வெறிச்சோடிக் கிடந்தது.

ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த விரும்புவோர் பெரும்பாலும் புறநகர் ரயில்களை பயன்படுத்தினர்.

ராஜாஜி மண்டபத்தை இணைக்கும் சாலைகள் பல்வேறு இடங்களில் தடுக்கப்பட்டிருந்தன. ஆட்டோரிக்‌ஷாக்கள் அரிதாகவே காணப்பட்டன.

எம்.ஆர்.டி.எஸ். ரயில் நிலையங்களான சிந்தாதிரிப் பேட்டை மற்றும் சேப்பாக்கத்தில் டிக்கெட் கவுன்ட்டர்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததைக் காண முடிந்தது.

செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை கடற்கரை ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி ஆகிய ஊர்களுக்கும் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in