தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடுகளில் 3-வது நாளாக சோதனை: பறிமுதல் தங்கம் 179 கிலோவாக உயர்ந்தது

தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடுகளில் 3-வது நாளாக சோதனை: பறிமுதல் தங்கம் 179 கிலோவாக உயர்ந்தது
Updated on
2 min read

தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர், உறவினர் வீடு களில் நேற்று 3-வது நாளாக வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர் களிடம் இருந்து பறிமுதல் செய்யப் பட்ட தங்கத்தின் மதிப்பு 179 கிலோவாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காட்பாடியில் ஒரு காரில் இருந்து ரூ.24 கோடிக்கு புதிய ரூ.2000 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் பொருட்டு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. புதிய 2 ஆயிரம் ரூபாய் அறிமுகம் செய்யப்பட்டது. வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கவும், பணத்தை வங்கியில் செலுத்தவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

பிரதமரின் திடீர் அறிவிப்பைத் தொடர்ந்து கறுப்புப் பணப் பதுக் கல்காரர்கள் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்தனர். மேலும், வங்கி அதிகாரிகள் துணையோடு சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட பணத்தை புது பணமாக மாற்றினர்.

இவர்களின் பட்டியலை தயார் செய்து அதன் அடிப்படையில் பதுக்கல்காரர்களின் வீடு, அலுவல கங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னையில் வசித்து வரும் தொழிலதிபரும், பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரருமான சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாச ரெட்டி, நண்பர் பிரேம் ஆகியோரின் சென்னை, வேலூரில் உள்ள வீடு, அலுவலகம் என 8 இடங்களில் 2 நாட்களாக வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

நேற்று முன்தினம் வரை 96.89 கோடி ரூபாய் ரொக்கம், 127 கிலோ தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்து இருந்தனர். ரொக்கப் பணத்தில் 9.43 கோடிக்கு புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. பறிமுதல் செய்யப்பட்ட, 127 கிலோ தங்கத்தின் மதிப்பு ரூ.36.29 கோடி.

நேற்று 3-வது நாளாக, சோதனை தொடர்ந்து நடந்தது. சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 52 கிலோ தங்கக் கட்டிகள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையும் சேர்த்து பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தங்கத்தின் அளவு, 179 கிலோவாக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள அவரது வீட்டுக்கு கடந்த வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனர். அங்கு துப்பாக்கி ஏந்திய போலீ ஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப் பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் சேகர் ரெட்டிக்கு நெருக்கமான நபர்களின் செயல்பாடுகளை வருமான வரித் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா பாலாற்றில் சேகர் ரெட்டி யின் கட்டுப்பாட்டில் இயங்கும் மணல் குவாரியில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் ரகசிய விசாரணை நடத்தியுள்ளனர். அங்கு ஒரு யூனிட் மணல் எவ்வளவு விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு எத்தனை லாரிகளில் மணல் எடுத்துச் செல்கின்றனர் என்ற விவரங்களை திரட்டியுள்ளனர்.

இதற்கிடையே சேகர் ரெட்டியின் நெருங்கிய நட்பு வட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் காரில் பதுக்கி வைத்திருந்த ரூ.24 கோடி ரொக்கப் பணத்தை வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை பறிமுதல் செய்துள்ள னர். இவை அனைத்தும் புதிதாக வெளியிடப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகள். இவை சேகர் ரெட் டிக்கு சொந்தமானவை என கூறப்படுகிறது. இதையடுத்து, கார் ஓட்டுநர் மற்றும் அதன் உரிமையாளரிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து வருமான வரித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பணம் பறிமுதல் செய்த தகவல் உண்மைதான். அது தொடர்பான முழு விவரங்களையும் தெரிவிக்க முடியாது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது’’ என்றனர். இதற்கிடையே சேகர் ரெட்டியின் சொத்துக்களை முடக்க அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

198 சீல்களும் அகற்றப்பட்டு ஆய்வு

காட்பாடி காந்தி நகர் கிழக்கு 10-வது குறுக்குத் தெருவில் உள்ள சேகர் ரெட்டியின் வீட்டுக்கு வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த 8-ம் தேதி இரவு ‘சீல்’ வைத்தனர். அன்றைய தினம் வீட்டில் யாரும் இல்லை. எனவே, அந்த வீட்டின் 198 இடங்களில் ‘சீல்’ வைத்து கதவில் நோட்டீஸை ஒட்டினர். இந்நிலையில், சேகர் ரெட்டியின் மனைவி ஜெய நேற்று மாலை 6 மணியளவில் வீடு திரும்பினார். இதையடுத்து, வேலூர் மண்டல வருமான வரித் துறை உதவி ஆணையர் முருகபூபதி தலைமையில் 2 பெண்கள் அடங்கிய 13 பேர் குழுவினர் சேகர் ரெட்டியின் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் ஜெய முன்னிலையில் 198 சீல்களை அகற்றி சோதனை நடத்தினர். விடிய விடிய சோதனை தொடர்ந்து நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in