

பொள்ளாச்சி: இபிஎஸ், ஓபிஎஸ் மீண்டும் இணைய வாய்ப்பில்லை என அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் நேற்று முன்தினம் இரவு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களில் 96 சதவீதம் பேர் பழனிசாமி பக்கம் உள்ளனர். தலைமை நிலைய செயலாளர், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 60 பேர் எங்கள் பக்கம் உள்ளனர். நிச்சயமாக இரட்டை இலை சின்னம் எங்களுக்குதான் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
525 பொய் வாக்குறுதிகளை சொல்லி ஏமாற்றி திமுக ஆட்சிக்கு வந்து விட்டது என்பதை தமிழக மக்கள் உணர்ந்துள்ளனர். இதை பொதுமக்களே பொதுஇடங்களில் சொல்லி வருகின்றனர். இது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எதிரொலிக்கும்.
மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் அரசாக திமுக அரசு இல்லை. நிச்சயமாக இபிஎஸ்., ஓபிஎஸ் இணைவதற்கான வாய்ப்பு இல்லை, தொண்டர்களுக்கும் அந்த எண்ணம் இல்லை, அதிமுக அலுவலகத்தை அடித்து நொறுக்கிய ஓபிஎஸ்ஸை எந்த தொண்டனும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.