Published : 27 Jan 2023 06:57 AM
Last Updated : 27 Jan 2023 06:57 AM
சென்னை: சென்னையில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் குடியரசு தின விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.ராஜா தேசியக் கொடியேற்றி வைத்து சிஐஎஸ்எப் வீரர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் உயர்நீதிமன்றத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.
இதேபோல், தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் நடத்தப்பட்ட குடியரசு தினவிழாவில் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் தேசியக் கொடியேற்றினார்.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்லவன் இல்லத்தில் நடந்த விழாவில் அதன் மேலாண் இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அலுவலகத்தில் அதன் மேலாண் இயக்குநர் ம.கோவிந்த ராவ், தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அதன்மேலாண் இயக்குநர் ஆர்.மணிவண்ணன் ஆகியோர் பங்கேற்றுதேசியக் கொடியை ஏற்றினர்.இதைத் தொடர்ந்து அந்தந்த துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.
இதுதவிர தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற விழாவில் அதன் ஆணையர் வெ.பழனிகுமார், தேசியக் கொடியேற்றி காவல்துறை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சென்னை மாநகராட்சி சார்பில் ரிப்பன் மாளிகையில் நடந்த விழாவில் மேயர் ஆர்.பிரியா தேசியக் கொடியை ஏற்றினார்.
பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 100 அலுவலர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார். இதேபோல், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ஆட்சியர் சு.அமிர்த ஜோதி தேசியக் கொடியேற்றி, மாற்றுத் திறனாளிகள் உட்பட பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தெற்கு ரயில்வே சார்பில் பெரம்பூரில் நடைபெற்ற விழாவில் பொதுமேலாளர் ஆர்.என்.சிங்,ரயில்வே இணைப்புப் பெட்டித் தொழிற் சாலையின் அரங்கத்தில் நடந்த விழாவில் அதன் பொதுமேலாளர் பி.ஜி.மால்யா, சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் டிஆர்எம் கணேஷ், நந்தனம் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகத்தில் அதன் மேலாண் இயக்குநர் மு.அ.சித்திக், இந்தியன் ஒவர்சீஸ் வங்கி சார்பில் சென்ட்ரலில் நடந்த விழாவில் அதன் மேலாண் இயக்குநர் அஜய்குமார் வத்சவா, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குநர் வி.சி.அசோகன் ஆகியோர் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.
சென்னை துறைமுக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதன்தலைவர் சுனில் பாலிவால், வருமானவரித் துறை அலுவலகத்தில் நடை பெற்ற விழாவில், தமிழ்நாடு, புதுச்சேரிக்கான முதன்மை தலைமை ஆணையர் ஆர்.ரவிசந்திரன், சுங்கத்துறை அலுவலகத்தில் அதன் முதன்மை ஆணையர் மாண்டல்வியா னிவாஸ், எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் நடந்த விழாவில், தலைவர் (பொறுப்பு) சுனில் பாலிவால், அண்ணா நகர் ஓஎன்ஜிசி அலுவலகத்தில் நடந்த விழாவில் மேலாளர் (காவிரிப் படுகை) ஏ.கே.தாஸ் பங்கேற்று, தேசியக் கொடியை ஏற்றிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT