

சென்னை: காலை உணவுத் திட்டம் அடுத்தகட்டமாக 500 பள்ளிகளில் கொண்டுவரப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: காலை உணவுத் திட்டம்1,545 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக500 பள்ளிகளில் விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் கொண்டு வரப்படும்.
சென்னையில் ‘ஜி20’ கல்வி கருத்தரங்கில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்கும்போது, தேசிய கல்விக் கொள்கையில் தமிழகத்துக்கு இருக்கக்கூடிய ஆட்சேபனைகள் குறித்து தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.